

பாஜகவுடன் கூட்டணி அமைக்க விஜயகாந்தின் தேமுதிக முன்வரும் என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.
திருச்சியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை எப்படியாவது தோற்கடிக்க வேண்டிய கடமை, தமிழக மக்களுக்கு உள்ளது.
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவிக்க ராஜபக்சேவிற்கு உதவிய கட்சி காங்கிரஸ்.
தே.மு.தி.க, தலைவர் விஜயகாந்த் தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்க முன் வருவார் என நம்புகிறோம்.
டெல்லியில் பா.ஜ.க.வின் வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக, காங்கிரஸ் கட்சியே ஆம் ஆத்மி கட்சியை வளர்க்கிறது என்பது எனது சந்தேகம்.
பிரதமர் மன்மோகன் சிங் மீண்டும் பிரதமர் பொறுப்பு ஏற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு, நாட்டு நலனிற்கு நல்லது. அந்த முடிவை நான் வரவேற்கிறேன்" என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.