

சென்னையில் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் சுதந் திர தின விழா கொண்டாடப் பட்டது.
நாடு முழுவதும் சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் (முழு கூடுதல் பொறுப்பு) ரா.அழகுமீனா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் சைதை துரைசாமி தேசிய மாணவர் படை, சாரண, சாரணியர் அணிவகுப்பு , கலர் பார்ட்டி மற்றும் வாத்தியக் குழுக்களை பார்வையிட்டு தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக வளாகத்தில் சுற்றுலாத்துறை ஆணையர் சஹாய் மீனா தேசியக் கொடியை ஏற்றி வைத்து அலுவலர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தலைமை அலுவலகத்தில் சென்னை குடிநீர் வாரிய முதன்மைச் செயலர் மற்றும் மேலாண்மை இயக்குநர் விக்ரம் கபூர் தேசியக் கொடியை ஏற்று வைத்தார். சென்னை துறைமுகத்தில் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் சிரில் சி.ஜார்ஜ் தேசியக் கொடியை ஏற்றினார். சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குநர் தீபக் சாஸ்திரி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர் கவுதம் ராய் தேசியக் கொடியை ஏற்றினார்.
இந்தியன் வங்கி தலைமை அலுவலக வளாகத்தில் வங்கியின் செயல் இயக்குநர் ஆர்.சுப்ரமணியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அயனாவரத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படையின் அணிவகுப்பு தளத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோக்ரி, பெரம்பூரில் உள்ள ஐசிஎப்பில் அதன் பொது மேலாளர் எஸ்.மணி ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி ரயில்வே பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற் றுக் கொண்டனர். சென்னை பல்லவன் இல்லத்தில் மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் வீ.கிருஷ்ணமூர்த்தி கொடியை ஏற்றி வைத்து சிறப்பாக பணியாற்றிய 61 ஓட்டுநர்களுக்கும், 32 நடத்து நர்கள், 42 தொழில்நுட்ப பணி யாளர்களுக்கும், 14 பரிசோத கர்களுக்கும் பாராட்டுச் சான் றிதழ்களை வழங்கினார்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் உட்பட மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் வயிற்று புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சேவாலயா அறக்கட்டளை சார்பில் திருவள்ளூரில் ரத்த தானம் முகாம் நடைபெற்றது.