

இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அடையாரில் உள்ள ஐநா துணை அலுவலகத்தின் கேட்டை பூட்டி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இலங்கை மீது ஐநா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு இளைஞர் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர்கள் சென்னை அடையாரில் உள்ள ஐநா அலுவ லகத்தை வியாழக்கிழமையன்று மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது ஐநா அலுவலகத்துக்குள் நுழைந்து நுழைவு வாயில் கேட்டை மூடி பூட்டு போட்டனர்.
அங்கு ஏற்றப்பட்டிருந்த ஐநா கொடியை இறக்கி தீ வைத்தனர். பின்னர் அலுவலக அறை கதவுகளையும் மூடி முற்றுகை போராட்டம் நடத்தினர். கேட்டின் மீது ஏறி நின்று இலங்கைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஐநாவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
தமிழ்நாடு இளைஞர் மற்றும் மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த பிரபாகரன் உட்பட 18 பேரை அடையார் காவல் துறையினர் கைது செய்தனர்.