ஜல்லிக்கட்டு காளையின் வயிற்றிலிருந்து 38.4 கிலோ பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்கள் அகற்றம்

ஜல்லிக்கட்டு காளையின் வயிற்றிலிருந்து 38.4 கிலோ பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்கள் அகற்றம்
Updated on
1 min read

ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், ஜல்லிக்கட்டு காளையின் வயிற்றிலிருந்து 38.4 கிலோ பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.

திருச்சி மாவட்டம் துவாக்குடியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர், ஜல்லிக்கட்டு காளை கடந்த ஒரு மாதமாக தீவனம் உட்கொள்ளாமல், மெலிந்து, வயிற்று வலியுடன் அவதிப்பட்டு வந்தது. இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு, இந்த காளையை அய்யப்பன் அழைத்துச் சென்றார்.

மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்ததில், மாட்டின் முன் வயிறு முழுவதும் அடைப்புகள் நிரம்பி இருப்பது கண்டறியப்பட்டது. கல்லூரியின் கால்நடை அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்க துறை தலைவர் டாக்டர்.அ. அருண்பிரசாத் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் டாக்டர்கள் செந்தில்குமார், விஜயகுமார், ப.தமிழ்மகன் கொண்ட குழுவினர், அறுவை சிகிச்சை மூலம் காளையின் வயிற்றிலிருந்து 38.4 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகள், எல்இடி பல்புகள், சணல், பிளாஸ்டிக் கயிறு, குண்டூசிகள், செருப்புத் தோல் ஆகியவற்றை அகற்றினர். அந்தக் காளை தற்போது நலமாக உள்ளது.

இதுகுறித்து பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் டாக்டர் ராஜசுந்தரம் தெரிவித்தது, “மாடுகள் பிளாஸ்டிக் பைகளை உட்கொள்ளாமல் தவிர்க்க பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்” என்றார்.

கல்லூரி முதல்வர் க.ந.செல்வக்குமார் தெரிவித்தது, “மேய்ச்சல் நிலம் குறைதல், நகரமயமாக்கல், பிளாஸ்டிக் பைகள் அதிகமாக உபயோகித்தல் போன்ற காரணங்களால் மாடுகளுக்கு இதுபோன்ற உபாதைகள் ஏற்படுகிறது. எனவே, கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளின் தீவன முறையை கண்காணித்து தேவையற்ற பொருட்களை கால்நடைகள் உண்ணுவதை தவிர்க்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.


காளையின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டப் பொருட்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in