

மனிதநேய ஜனநாயக கட்சி யாருக்கு ஆதரவு என்பது குறித்து நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்று அக்கட்சி யின் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.
தற்போதுள்ள அரசியல் சூழ் நிலையில் உங்களுடைய ஆதரவு வி.கே.சசிகலாவுக்கா அல்லது ஓ.பன்னீர்செல்வத்துக்கா என்று தமிமுன் அன்சாரியிடம் கேட்ட தற்கு, “நான் மட்டும் எந்த முடிவும் எடுக்க முடியாது. நாளை (இன்று) நடக்கும் நிர்வாகக்குழு கூட்டத்தில் யாருக்கு ஆதரவு அளிப்பது? என்பது பற்றி முடிவு எடுக்கப்படும். அதன்பின் முடிவை அறிவிப்போம்” என்றார்.