

சென்னை உயர் நீதிமன்றத்தில் நேர்முக உதவி யாளர், நேர்முக எழுத்தர், ரீடர், தட்டச்சர், கணினி இயக்குபவர், காசாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் ஆகிய பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது. இந்த நிலையில், தேர்வுக்கான உத்தேச விடைகளை (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளி யிட்டிருக்கிறது. இந்த உத்தேச விடைகளில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதுதொடர்பான விளக்கங்களை உரிய ஆவணங்களுடன் செப்டம்பர் 6-ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.