

மதுரையில் கடந்த 12-ம் தேதி பிளஸ் 2 மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பத்தாம் வகுப்பு மாணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மகால் 7-வது தெருவைச் சேர்ந்தவர் குமரேஷ் பாபு. இவரது மகன் நாகராஜ்(17). பிளஸ் 2 மாணவரான இவர் கடந்த 12-ம் தேதி இரவு 9.30 மணிக்கு மதுரை கீழவெளி வீதியில் கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில் நடந்து சென்றார்.
அப்போது அவரை வழிமறித்த 3 பேர் அவசரமாகப் பேச வேண்டியுள்ளது என, நாகராஜிடம் செல்போன் கேட்டு வாங்கினர். செல்போனில் உள்ள 2 சிம் கார்டுகளை கழற்றிவிட்டு அவர்கள் வைத்திருந்த சிம் கார்டு ஒன்றை போட்டு பேசியுள்ளனர். இதன் பிறகு, நாகராஜ் செல்போனை கேட்டபோது, கொடுக்காமல் அவரை கை, தொடையில் கத்தி யால் குத்திவிட்டு செல்போனுடன் மூவரும் தப்பினர். இதில் நாகராஜ் பலியானார்.
கொலையாளிகளைப் பிடிக்க, துணை காவல் ஆணையர் அருண் சக்திகுமார் தலைமையில் ஆய்வாளர்கள் ராஜமுரளி, சூரக்குமார் அடங்கிய 3 தனிப் படையினர் விசாரித்தனர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள், கொலையாளிகள் செல்போனில் பேசிய விவரங்களை சேகரித்தனர்.
இக்கொலை வழக்கில் மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் உட்பட 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. மூவரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, செல்போனை கைப்பற்றினர்.
இதுகுறித்து காவல் ஆணை யர் சைலேஷ்குமார் யாதவ் செய்தி யாளர்களிடம் நேற்று கூறியதாவது:
நாகராஜ் தனது பாட்டி வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது அவரை வழிமறித்த மூன்று சிறுவர்கள் நாகராஜிடம் செல்போன் கேட்டுள்ளனர். அவர் தனது செல்போனில் பேலன்ஸ் இல்லை என்றபோது, தங்களின் சிம்கார்டில் பேலன்ஸ் உள்ளதாக வும், அதன் மூலம் பேசிவிட்டு திருப்பி தருவதாகவும் வாங்கி யுள்ளனர்.
பேசி முடித்தபிறகு மீண்டும் செல்போனை நாகராஜிடம் வழங் காமல் சென்றதால், அவர்களை நாகராஜ் பின்தொடர்ந்துள்ளார். ஆத்திரத்தில் கத்தியால் குத்தியதில் நாகராஜ் இறந்தார்.
இவ்வழக்கில் தொடர்புடைய மூவரில் இருவர் 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு பள்ளிக்குச் செல்லவில்லை. ஒருவர் மட்டும் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி வந்தார்.
இவர்களின் நண்பர் ஒருவரது செல்போன் தொலைந்து விட்ட தால், அவர் மூவரிடமும் செல்போன் ஒன்றை கேட்டுள்ளார். இதற்காக மூவரும் நாகராஜின் செல்போனை பறித்ததாகக் கூறு கின்றனர். மூவரில் இருவர் மீது மதுரை மதிச்சியம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே வழக்கு கள் நிலுவையில் உள்ளன.
மாணவர்கள் அதிகரிப்பு
மதுரையை பொறுத்தவரை 18 முதல் 25 வயதுக்கு உட்பட இளைஞர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் அதிகமாக ஈடுபடு கின்றனர். கடந்த ஆண்டு முதல் இதுவரை பதிவான 32 வழக்குகளில் 52 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.
சிறு வயதில் குற்றம் செய் வோரை தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாங்களும் இதற்கான முயற்சியில் ஈடுபடுகி றோம். கல்வி நிறுவனங்களும், பெற்றோரும் கவுன்சலிங் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண் டும். மதுரையில் முக்கிய இடங் களில் கேமராக்கள் பொருத்த நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அப்போது துணை காவல் ஆணையர்கள் அருண் சக்திகுமார், ஜெயந்தி, பாபு உடனிருந்தனர்.