Last Updated : 27 Mar, 2017 11:31 AM

 

Published : 27 Mar 2017 11:31 AM
Last Updated : 27 Mar 2017 11:31 AM

தமிழக அரசின் தடையை மீறி அச்சிடப்பட்ட காகிதங்களில் பொட்டலமிடப்படும் உணவுப்பொருட்கள்: அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் நோய்கள் பரவும் அபாயம்

அரசு விதித்த தடையை மீறி பழைய அச்சிடப்பட்ட செய்தித்தாள் காகிதத்தில் உணவுப்பொருட்கள் பொட்டலமிடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

உணவகங்கள் மற்றும் தேனீர் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பதார்த்தங்கள் பழைய அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் பொட்டலமிடக் கூடாது என இந்திய அரசின் உணவு பாது காப்பு ஆணையரகம் தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியானது.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையிலும், பெட்டிக்கடைகள், டீ கடைகள், உணவு விடுதிகளில் வடை, பஜ்ஜி, போண்டா, பக்கோடா, இறைச்சி, மீன்கள் போன்ற உணவை, செய்தித் தாள்களில் வைத்து எண்ணெய் பிழிவது போன்ற செயலானது சிறிது சிறிதாக விஷத்தை உண் பதற்கு சமமாகும். உணவு பொருட்களுடன், செய்தித் தாள்களில் உள்ள மையானது சேர்ந்து மிகவும் தீவிரமான உடல் பாதிப்பையும், எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும்.

உலோக அசுத்தங்களும், தீங்கு விளைவிக்கக்கூடிய தாலேட் போன்ற வேதிப்பொருள், கனிம எண்ணெய்களும் அச்சிட்ட காகிதத்தில் பொட்டலமிடப்படும் உணவில் காணப்படுவதால் அஜீரணக் கோளாறை உருவாக்கு வதோடு, கடுமையான விஷத் தன்மையையும் ஏற்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தி இழந்து, புற்றுநோய் உள்ளிட்ட நோய் தாக்குதல் ஏற்பட காரணமா கிறது. எனவே, அனைத்து உணவுப் பொருள் விற்பனை நிறுவனங்களிலும் செய்தித்தாள் மற்றும் அது தொடர்பான பொருட்களைக் கொண்டு உணவுப் பொருட்களைப் பொட்டலமிடவோ, உண்பதற்கோ வழங்கக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டும் இதுவரை எவ்வித ஆய்வும் மேற்கொள்ளப் படவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதுகுறித்து கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தேசியசீலன் கூறும்போது, ‘‘அரசு விதித்த தடை உத்தரவை மீறி இன்னமும் பழைய அச்சிடப்பட்ட தாளில் உணவுப்பொருட்களை பொட்டலமிட்டு வழங்கி வருகின்ற னர். இதுதொடர்பாக உணவுப் பாது காப்பு அலுவலர்களும் ஆய்வு நடத்தவில்லை. கண்காணிப்பு இல் லாத எந்த நடவடிக்கையும் 100 சதவீ தம் பலன் தருவதில்லை. எனவே மக்களின் நலன் காக்க வேண்டிய நடவடிக்கையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கவனம் செலுத்திட வேண்டும்,’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x