வினுசக்ரவர்த்தியின் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி

வினுசக்ரவர்த்தியின் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி
Updated on
1 min read

உடல்நலக்குறைவால் காலமான பிரபல நடிகர் வினுசக்ரவர்த்தியின் உடலுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நகைச்சுவை மற்றும், குணச்சித்திர வேடங்களில் நடித்த வினுசக்ரவர்த்தி உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் இரவு சென்னையில் காலமானார். நேற்று அவரது உடலுக்கு இயக்குநர் எஸ்பி.முத்துராமன், தமிழ் திரைப் பட தயாரிப்பாளர் சங்கத் தலை வரும் தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளருமான விஷால், நடிகர்கள் சிவகுமார், நெப்போலியன், விவேக், செந்தில், ஒய்.ஜி.மகேந்திரன், பாண்டிய ராஜன், மனோபாலா, சரவணன், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ ஷங்கர், சங்கிலி முருகன், சூரி, வையாபுரி, மயில்சாமி, நடிகை அம்பிகா, பிரேமலதா விஜயகாந்த், தென்னிந் திய நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து அவரது உடல் போரூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

திரைத்துறை சங்கங்கள் இரங்கல்

வினுசக்ரவர்த்தியின் மறைவு குறித்து நடிகர் சங்கம் வெளி யிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தனது இயல்பான நடிப்பால் மக்கள் அனைவரையும் கவர்ந்த வினுசக்ரவர்த்தி காலமானதை அறிந்து அதிர்ச்சியுற்றோம். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், படுகா, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஆயிரத்து மூன்று படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றவர் வினுசக்ரவர்த்தி. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

நடிகர் கவுண்டமணி வெளியிட் டுள்ள இரங்கல் செய்தியில், "என்னு டன் அதிக படங்களில் நடித்தவர் மறைந்த வினுசக்ரவர்த்தி. அவ ருடைய மறைவு திரையுலகுக்கு ஒரு பேரிழப்பு. அவர் நல்ல நடிகர் மட்டுமல்ல, எனக்கு நல்ல நண்பரும்கூட. வெளியூரில் இருப் பதால் என்னால் வர முடியவில்லை. அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று கூறியுள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத் குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘கதை, வசனகர்த்தா வாக, திரையுலகில் காலடி எடுத்து வைத்த இவர், பின்பு குணச்சித்திர வேடங்களில் நடித்து தனக்கென தனி முத்திரையை பெற்று பிரபல மானார். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கி றேன்’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in