

ஊதியக் குழு பரிந்துரைப் படி ஊதியம் பெறாமல், 2006-ம் ஆண்டுக்கு முந்தைய ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படியை, 200 சதவீதத்திலிருந்து, 212ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2006-ம் ஆண்டு ஊதியக் குழு அமைக் கப்பட்டது. மத்திய அரசின் 6-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலருக்கு உயர்த்தப்பட்ட ஊதியம், அகவிலைப்படி அளிக்கப்படுகிறது.
ஆனால், ஊதியக்குழு பரிந்துரைத்தாலும், பணி இடை நீக்கம், ஒழுங்கு நடவடிக்கை மற்றும் சொந்த பிரச்சினை போன்ற காரணங்களால், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் அதை பெற முடியவில்லை. எனவே அவர்கள் அனைவருமே 2006-ம் ஆண்டுக்கு முந்தைய ஊதியம் மற்றும் அகவிலைப் படியைத்தான் பெறலாம். பின்னர் அவர்களுக்கும் அகவிலைப்படி 200 சதவீதமாக உயர்த்தப்பட்டு, தமிழக அரசு கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த 200 சதவீதத்தை, 212 ஆக உயர்த்தி, தமிழக நிதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதை, ஜூலை 1, 2014 முதல் கணக்கிட்டு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.