150 நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்: அமைச்சர்

150 நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்: அமைச்சர்
Updated on
1 min read

2017 - 2018 நிதியாண்டில் 150 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்தார்.

தமிழக பட்ஜெட் 2017 - 2018, சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது.

நிதிநிலை அறிக்கையை வாசித்த அமைச்சர் ஜெயக்குமார், 2017 - 2018 நிதியாண்டில் 150 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.

அரசால் கண்டறியப்பட்டுள்ள 36,930 பள்ளி செல்லாத குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.552 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

மாணவ, மாணவியருக்கு சீருடை, புத்தகப்பை, சைக்கிள் உள்ளிட்டவை வழங்க ரூ.1,503 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

விலையில்லா மடிக்கணினி வழங்குவதற்காக ரூ.758 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in