

சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (59). 4 ஆண்டுகளாக சரியாக சாப்பிட முடியாமலும் தண்ணீர் குடிக்க முடியாமலும் அவதிப்பட்டு வந்தார். மேலும் அவர் இருமும்போது வாய்வழியாக நீளமான கட்டி வெளியே வருவதும், மீண்டும் உள்ளே செல்வதுமாக இருந்துள்ளது. இதனால் பயந்துபோன அந்த பெண் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வந்தார்.
டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது, அந்த பெண்ணின் உணவுக் குழாயில் நீளமான கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத னால்தான் அவரால் சாப்பிட முடியவில்லை. அந்த கட்டி தான் இருமும்போது வாய் வழியாக வெளியே வருகிறது என தெரியவந்தது.
உடனடியாக மருத்துவ மனை டீன் கே.நாராயணசாமி ஆலோசனையின்படி காது, மூக்கு, தொண்டை துறையின் இயக்குநர் எம்.கே.ராஜசேகர், இரைப்பை குடல் அறுவை சிகிச்சைத் துறை இயக்குநர் ஓ.எல்.நாகநாத் பாபு மற்றும் மயக்க நிபுணர் கேத்ரின் ரத்னசாமி, டாக்டர் என்.சுரேஷ் ஆகியோர் அடங்கிய குழு வினர் அதிநவீன அறுவை சிகிச்சை உபகரணங்களை வாய் வழியாக உள்ளே செலுத்தி உணவுக் குழா யில் இருந்த கட்டியை வெற்றிகரமாக அகற்றினர்.
இது தொடர்பாக டீன் கே.நாராயணசாமி டாக்டர்கள் எம்.கே.ராஜசேகர், ஓ.எல்.நாகநாத் பாபு ஆகியோர் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:
எந்த தழும்பும், ரத்தக் கசிவும் இல்லாமல் பெண்ணின் உணவுக் குழாயில் இருந்த கட்டி அகற்றப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை சுமார் 1 மணி நேரம் நடை பெற்றது. இதை அகற்றாமல் விட்டிருந்தால் புற்றுநோய் கட்டியாக மாறுவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. உணவுக் குழாயில் இருந்த இந்த கட்டி சுமார் 300 கிராம் எடை 16 செமீ நீளம் கொண்டது.
இதற்குமுன் ஆந்திராவில் 4 செமீ நீளமுள்ள கட்டியும், ஸ்பெயின் நாட்டில் 5 செமீ நீளமான கட்டியும் அகற்றப் பட்டுள்ளன. உலகில் முதல் முறையாக உணவுக் குழா யில் இருந்த பெரிய கட்டி அகற் றப்பட்டுள்ளது. தனியார் மருத் துவமனையில் ரூ.3 லட்சம் வரை செலவாகும் இந்த அறுவை சிகிச்சை, முதலமைச் சரின் விரிவான மருத்துவக் காப் பீட்டுத் திட்டத்தில் இலவச மாக செய்யப்பட்டுள்ளது.