Published : 30 Jul 2016 08:52 AM
Last Updated : 30 Jul 2016 08:52 AM

பொருளாதார சீர்திருத்தத்தால் நாடு வளர்ந்தாலும் பொதுமருத்துவம், கல்விக்கு கடும் பாதிப்பு: முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து

‘பொருளாதார சீர்திருத்தத்தால் வளர்ச்சியை அனுபவித்தாலும் பொது மருத்துவம், கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. பழங்குடி யினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள னர்’ என்று ‘தி இந்து’ மையம் சார்பில் நடந்த விவாத நிகழ்ச்சி யில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

அரசியல் மற்றும் பொது கொள்கைகளுக்கான ‘தி இந்து’ மையம் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் எம்.பி. பங்கேற்ற நிகழ்ச்சி சென்னை மியூசிக் அகாடமியில் உள்ள கஸ்தூரி சீனிவாசன் அரங் கில் நேற்று நடந்தது. கடந்த 1991-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார சீர்திருத்தம் மற்றும் 25-வது ஆண்டில் அதன் தாக்கம் என்ற தலைப்பில் விவாதம் நடந்தது.

பொருளாதார அறிஞரான ஜெய்ராம் ரமேஷ் எழுதி வெளி வந்துள்ள ‘டு த பிரிங்க் அண்ட் பேக்: இண்டியாஸ் 1991 ஸ்டோரி’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் ஆசிரியர் முகுந்த் பத்மநாபன் கேள்விகளை எழுப்பி இந்நிகழ்ச்சியை தொகுத்தார்.

முன்னதாக ஜெய்ராம் ரமேஷை ‘இந்து’ என்.ரவி அறிமுகம் செய்தார். ‘இந்து’ என்.ராம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொருளாதார சீர்திருத்தத்தால் ஏற்பட்ட தாக்கம் குறித்து கேள்விகளை எழுப்பினர். நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட பல் வேறு கேள்விகளுக்கு பதிலளித்து ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

கடந்த 1991-ம் ஆண்டு நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக் கடியைச் சந்தித்தது. பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தில் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் ஆகியோர் இருந்தனர். ரூபாய் மதிப்பை இரண்டு முறை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வெளிநாடுகளுக்கு 65 டன் தங்கத்தை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தனியார் சேவை உலகத் தரம்

கடந்த 25 ஆண்டுகளில் நுகர் வோரைப் பொறுத்தமட்டில், வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. மக்களின் பொருளாதார நிலை உயர்ந்துள்ளது. வறுமைக்கோட் டுக்கு கீழ் இருப்பவர்களின் எண் ணிக்கை குறைந்துள்ளது. ஆனால், அரசின் மருத்துவ சேவை, கல்வி ஆகியவற்றின் தரம் குறைந் துள்ளது. அதேநேரம் இந்த துறை களில் தனியாரின் சேவை உலகத் தரத்துக்கு உயர்ந்துள்ளது. இயற்கை வளங்களான நீர், நிலம், கனிமங்கள் ஆகிய துறைகளில் கடும் நெருக்கடியை நாடு சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

உயர்கல்வியில் சேரும் மாண வர்களின் எண்ணிக்கை கடந்த 2004-ம் ஆண்டு 9 சதவீதமாக இருந்தது. இது 2014-ல் 20 சதவீத மாக உயர்ந்துள்ளது. ஆனால், தரம் கேள்விக்குறியதாக மாறி விட்டது. விவசாயத்துறை வளர்ச்சி, வீழ்ச்சி இரண்டையும் சந்தித்துள்ளது. இத்துறையில் பெருமைப்பட எதுவும் இல்லை. மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப துறையின் வளர்ச்சி இல்லை.

ஊழலின் ஆதாரம் மாற்றம்

பொருளாதார சீர்திருத்தத்துக்கு முன்பாக லைசென்ஸ் வழங்குவதில் தான் ஊழல் இருந்தது. இப்போது அது குறைந்துவிட்டது. ஆனால், நிலக்கரி, இயற்கை எரிவாயு, ஸ்பெக்ட்ரம், நிலம் போன்ற புதிய வடிவங்களில் ஊழல் உரு வாகிவிட்டது. ஊழலை தடுக்க கொண்டு வரப்பட்ட ‘இ-ஏலம்’ முறையில்கூட ஊழல் நுழைந்து விட்டதாக கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளில் பஞ்சாப் போன்ற வளர்ந்த மாநிலங்கள் ஏழை மாநிலங்களாகவும், ஜார்க் கண்ட், ஹரியாணா போன்ற ஏழை மாநிலங்கள் வளர்ந்த மாநிலங் களாகவும் மாறியுள்ளன. தாழ்த்தப் பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் வளர்ச்சி பெற்றுள்ளனர். பொருளாதார சீர்திருத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் பழங்குடியின மக்கள்தான். ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டதால், அவர்கள் இடம்பெயர்ந்து, 4 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் பதிலளித்தார்.

வங்கிகள் தனியார்மயம் குறித்த கேள்விக்கு பதிலளிக் கும்போது, ‘‘வங்கிகளை தனியார் மயமாக்குவதில் எந்த அரசியல் கட்சிக்கும் உடன்பாடு இல்லை என்பதால் அதற்கு வாய்ப்பே இல்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x