டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான கிராமசபை தீர்மானங்கள் செல்லாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான கிராமசபை தீர்மானங்கள் செல்லாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
2 min read

டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக கிராமசபைகளில் இயற்றப் பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்ட மதுக்கடைகளை வேறு இடங்களில் திறக்க டாஸ் மாக் நிர்வாகம் முயற்சி எடுத் தது. புதிதாக மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொட ரப்பட்டன. கிராமப்புறங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கக் கூடாது என கிராமசபைக் கூட்டங் களிலும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘மதுக் கடைகளுக்கு எதிராக கிராமசபைக் கூட்டங் களில் சிறப்புத் தீர்மானம் நிறை வேற்றியிருந்தால் அந்த கிராமங் களில் மதுபானக் கடைகளைத் திறக்கக்கூடாது’ என இடைக் காலத் தடை விதித்தது.

இதற்கிடையில், திருவள்ளூர் மாவட்டம் தடபெரும்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் யு.விக்னேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்ததாவது:

பொன்னேரி தாலுகாவில் மாநில நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் கடை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டது. இந்நிலையில் எங்கள் கிராமத்தில் மதுக்கடை திறக்கக்கூடாது என கிராமசபைக் கூட்டத்தில் கடந்த மே 1-ம் தேதி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை மீறி மே 8-ம் தேதி மதுக்கடை திறக்கப் பட்டது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத் தில் ஈடுபட்டதால், மே 13-ம் தேதி அந்தக் கடைக்கு பொன்னேரி வட்டாட்சியர் சீல் வைத்தார். மீண்டும் அந்தக் கடை மே 25-ம் தேதி திறக்கப்பட்டது.

கிராமசபையில் தீர்மானம்

கிராம பஞ்சாயத்து எல் லைக்கு உட்பட்ட பகுதியில் மதுக் கடை திறக்கக்கூடாது என கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், அதை மீறி மதுக்கடை திறக்க நடவடிக்கை எடுப்பது, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரா னது. அரசியலமைப்புச் சட்டத் துக்கும் விரோதமானது. எனவே, கிராமசபைத் தீர்மானத்துக்கு எதி ராக திறக்கப்பட்டுள்ள மதுக்கடை களை மூட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கோரியிருந் தார்.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது.

டாஸ்மாக் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், ‘‘தடபெரும் பாக்கத்தில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்கப்பட்டிருப்பதில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை. டாஸ் மாக் விதிகளுக்கு உட்பட்டே அங்கு மதுக்கடை அமைக்கப்பட் டுள்ளது. ‘டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை விதிகள் 2003’ஐ கிராமசபைத் தீர்மானங் கள் எந்த வகையிலும் கட்டுப் படுத்தாது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என வாதிட்டார்.

கிராமசபைத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டிருந்தால், அங்கு மதுக்கடை திறக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்திருப்பதை மனுதாரர் குறிப்பிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் தமது உத்தரவில் கூறியதாவது:

டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக கிராமசபைகளில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள், எந்த வகையிலும் டாஸ்மாக் மதுக் கடைகளை கட்டுப்படுத்தாது. மேலும் அது, ‘டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை விதிகள் 2003’க்கு எதிரானது. எனவே, மதுக் கடைகளுக்கு எதிராக இயற்றப் பட்ட அந்த தீர்மானம் செல்லாது என உத்தரவிட்டு, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in