Published : 15 Aug 2016 08:48 AM
Last Updated : 15 Aug 2016 08:48 AM

விவசாயிகள் சங்க தலைவர் சிவசாமி காலமானார்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.ஆர்.சிவசாமி(83), உடல்நலக் குறைவு காரணமாக கோவை அருகே உள்ள அவரது இல்லத்தில் நேற்று மதியம் கால மானார்.

மருத்துவம் பயின்ற இவர், விவசாயம் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண் பதற்காக போராட்டத்தில் ஈடு படத் தொடங்கினார். தமிழக விவசாயிகள் சங்கத் தலைவராக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துள்ள இவர், எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது மின் கட்டண உயர்வை எதிர்த்தும், விவசாயிகளுக்கு இலவச மின் சாரம் வழங்கக் கோரியும் அப் போதைய தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுவுடன் இணைந்து தீவிர போராட்டத்தை முன்னெடுத்தார்.

போராட்டம் காரணமாக, இவரது வீட்டுக்கு எம்.ஜி.ஆர். நேரில் வந்து விவசாயிகள் பிரச்சினை தீர்க்கப்படும் என உறுதி அளித்து சென்றுள்ளார். இந்த போராட்டத்தின் எதிரொலியாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்கப் பெற்றது.

சமீப நாட்களாக அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. கோவை மாவட்டம், பெரியநாயக் கன்பாளையம் அருகே மத்தம் பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலமானார். அவ ரது உடல், சொந்த கிராமத்திலேயே பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணி அளவில் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x