

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் ‘தமிழ்த்தாய் 69 - தமிழாய்வு பெருவிழா’வாக ஒரு மாத காலம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி 40 அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், 57 ஆய்வு நூல்கள் உட்பட 126 நூல்கள் வெளியீட்டுக்கும், பயிலரங்கம், கவியரங்கம் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழாய்வு பெருவிழாவின் தொடக்க விழா சென்னை தரமணி யில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேற்று நடைபெற் றது. பள்ளிக்கல்வி முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் இந்த விழாவை தொடங்கிவைத்து பேசியதாவது:
ஜெயலலிதாவிடம் 3 ஆண்டுகள் உதவியாளராக பணிபுரியும் பாக்கியத்தைப் பெற்றவன் நான். அவரது நிகழ்ச்சிகளுக்கு உரை தயாரித்து கொடுக்கும்போது அதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட் டுவார். தமிழில் ஆய்வுப்பட்டமும், டிலிட் பட்டமும் பெற்ற நான் தயாரிக்கும் உரையில் உள்ள பிழைகளை கண்டுபிடிக்கிறார் என்றால் அவருக்கு எவ்வளவு அறிவாற்றல் இருந்திருக்கும். அவருக்கு 8 மொழிகள் தெரியும். பொதுவாக, அவரது இருக்கைக்கு அருகில் மற்றவர்கள் உட்கார இருக்கை போடப்படாது. சற்று இடைவெளி விட்டுத்தான் இருக்கை போடப்பட்டிருக்கும். தனக்கு அருகில் யாரும் இருக்கக்கூடாது என்ற கர்வத்தோடுதான் இப்படி செய்கிறார் என்று குறைசொல்வார் கள். ஆனால் உண்மை அதுவல்ல. அவருக்கு அடிக்கடி ஏப்பம் வரும். இது அருகில் உள்ளவர்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என் பதற்காகத்தான் தனக்கு அருகே இருக்கை போட வேண்டாம் என்று அவர் சொல்வார்.
இவ்வாறு வைகைச்செல்வன் பேசினார்.
மொழிபெயர்ப்புத்துறை இயக் குநர் ந.அருள் பேசும்போது, “தமிழ்வளர்ச்சித் துறைக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து பல்வேறு பணிகள் நடைபெறக் காரணமாக இருந்தவர் ஜெயலலிதா” என்று குறிப்பிட்டார். தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் முன்னாள் உறுப்பினர்-செயலர் பேராசிரியர் கரு.நாகராஜன், ஜெயலலிதாவின் சாதனைகளை நினைவுகூர்ந்தார். பொதிகை தொலைக்காட்சி முன்னாள் இயக்குநர் பால ரமணி, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்குநர் கோ.செழி யன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன கலை பண்பாட்டுப்புல பேராசிரியர் பா.ராசா ஆகியோர் விழா நோக்கங்களை எடுத்துரைத்தனர். தமிழ் வளர்ச்சிக்கு ஜெயலலிதா செய்த பல்வேறு பணிகளை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விஜயராகவன் நினைவுகூர்ந்தார். முன்னதாக, உதவி பேராசிரியை பவித்ரா வரவேற்றார். பேராசிரியை சுலோ சனா நன்றி கூறினார்.
நேற்று தொடங்கியுள்ள தமி ழாய்வுப் பெருவிழா மார்ச் 3-ம் தேதி வரை ஒரு மாத காலம் கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 40 அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், 4 சிறப்பு சொற்பொழிவுகள், தொல்காப் பியர் ஆய்விருக்கை பயிலரங்கம், 69 கவிஞர்களின் கவியரங்கம், 69 மாணவர்களின் திருக்குறள் முற்றோதல், திருக்குறள் ஓவி யப்போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.