

அடையாறு இந்திரா நகரில் உள்ள டி.டி.கே மருத்துவமனையில் குடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை 30 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக மருத்துவமனையின் மனநல ஆலோசகர் சுதாமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக 'தி இந்து'விடம் சுதாமணி கூறியதாவது:
மதுவிலக்கை அமல்படுத்து வதற்காக முதல்வர் ஜெயலலிதா எடுத்திருக்கும் முடிவை வரவேற்கி றோம். மதுக் கடைகளை மூடுவது மற்றும் நேரத்தை குறைப்பது எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதே அளவுக்கு குடி நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டி யதும் முக்கியம். குடிக்கு அடிமை யாவது ஒரு நோய். ஒருவர் குடிக்க ஆரம்பிக்கும்போது எதை யெல்லாம் எதிர்பார்த்து குடிக் கிறாரோ, அதற்கு எதிர்மறையான விஷயங்கள்தான் அவரது வாழ்க் கையில் நடைபெறுகிறது.
குடிப்பவர்களில் யார் வேண்டு மானாலும் குடி நோயாளியாக மாறலாம். இது குடிப்பவரை மட்டு மல்லாது அவரது குடும்பத்தின ரையும் சேர்த்து பாதிக்கிறது. குடி நோயாளி உடலளவிலும், மனதள விலும் மதுவுக்கு அடிமையாகி விடுவதால் வாழ்க்கையில் பலவித மான பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதனால் குடிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து குடித்துக் கொண்டே இருப்பார். குடியை விடும்போது கை நடுக்கம், தூக்கமின்மை, மனச் சோர்வு போன்றவை ஏற்படும். ஒரு குடி நோயாளியால் குடிக்கும் அளவை குறைக்கவோ, இடை வெளியை அதிகரிக்கவோ முடியாது. வாழ்நாள் முழுவதும் குடிக்காமல் இருப்பதுதான் இந்த நோயில் இருந்து முழுமையாக விடுபட ஒரே வழி.
சென்னை அடையாறு இந்திரா நகரில் டி.டி.கே மருத்துவமனை கடந்த 36 ஆண்டுகளாக செயல் பட்டு வருகிறது. அனுபவமிக்க மருத்துவக் குழு மற்றும் மன நல ஆலோசகர்கள் அடங்கிய குழுவைக் கொண்டு கடந்த 36 ஆண்டுகளாக மருத்துவமனையில் குடி நோயாளி மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரத்யேகமான சிகிச்சை அளித்து வருகிறது. இந்த மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள குடி நோயாளியின் விருப்பம் மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் அவசியம். திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முதற்கட்ட ஆலோசனை (Consultation) இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த ஆலோசனையின் அடிப் படையில் குடி நோயாளியின் விருப் பத்தை பொறுத்து உடல் மற்றும் மனரீதியான சிகிச்சை ஒருமாத காலத்துக்கு அளிக்கப்படும். டி.டி.கே மருத்துவமனையில் வழங்கப்படும் இலவச முதற்கட்ட ஆலோசனை மற்றும் சிகிச்சையை எடுத்துக்கொண்டு நோயில் இருந்து முழுமையாக விடுதலை பெற்று நல்லதொரு வாழ்க்கை வாழ சரியான உதவியை பயன் படுத்திகொள்ளலாம்.
குடி ஒரு குடும்ப நோய் என்ப தால் குடும்பத்தினருக்கு பிரத் யேகமாக 2 வாரம் மனரீதியான வகுப்புகள், குழு பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படு கிறது. மேலும் குடி நோயாளியின் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கண்டறிய பிரத் யேகமாக வகுப்புகள் நடத்தப்படு கிறது. குடிநோயாளியின் குடியற்ற வாழ்க்கைக்கு உதவும் வகையில் ஆதரவாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கும் தனிப்பட்ட வகுப்பு கள் நடத்தப்படுகின்றன.
சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள டி.டி.கே. மருத்துவ மனை கடந்த 27 ஆண்டுகளாக சென்னையில் மட்டுமல்லாது தமிழகத்தில் ஆண்டுக்கு 6 கிராமங் களில் இலவச குடி நோய் சிகிச்சை முகாம் நடத்தி வருகிறது. எங்களது மருத்துவமனையின் மூலம் இது வரை 30 ஆயிரம் குடி நோயாளி கள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். மருத்துவமனையை 044-24912948, 24912949 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு சுதாமணி தெரிவித்தார்.