டாஸ்மாக் கடைகளை 4 நாட்கள் மூட சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

டாஸ்மாக் கடைகளை 4 நாட்கள் மூட சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு
Updated on
1 min read

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு, ஏப்ரல் 10,11,12 மற்றும் 15-ம் தேதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகள், பார்கள் மூடப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு, சென்னை மாவட்டம் முழுவதும் ஏப்ரல் 10-ம் தேதி காலை 10 மணி முதல், வாக்குப்பதிவு நடக்கும் 12-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நடக்கும் ஏப்ரல் 15-ம் தேதி முழுவதும் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றம் அவற்றை சார்ந்த பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். மேலும், எப் எல் -6 உரிமம் கொண்டவை நீங்கலாக எப்.எல் -2 முதல் எப்.எல்- 11 வரை உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் மற்றும் அதை சார்ந்த பார்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in