

வெண்பட்டுக் கூடுகளில் இருந்து எடுக்கப்படும் பட்டு நூல் தரமான தாக இருப்பதால், உள்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் அதிக தேவையும், வரவேற்பும் உள்ளது. தமிழகத்தில் ஆண் டுக்கு 1,500 மெட்ரிக் டன் வெண் பட்டுக் கூடுகள் உற்பத்தி செய் யப்படுகின்றன. 100 முட்டைகளில் இருந்து 80 கிலோவுக்கும் அதிக மாக வெண்பட்டுக் கூடுகளை உற்பத்தி செய்யும் விவசாயி களுக்கு கிலோவுக்கு ரூ.10 வீதம் தமிழக அரசு ஊக்கத் தொகை வழங்குகிறது. உற்பத்தி அளவு ஒரு கிலோ குறைந்தாலும் ஊக்கத் தொகை வழங்கப்படுவதில்லை.
இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறும்போது, “கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் ஒரு கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. தமிழக அரசு ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்குவதுடன், ஊக் கத் தொகைக்கான வரம்பை நீக்க வேண்டும். இன்று சட்டப் பேரவையில் நடக்கும் மானிய கோரிக்கையில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும்” என்றனர்.
இதற்கிடையே, பட்டு வளர்ப் புத் துறையில் நிலவும் சில பிரச்சி னைகளை தீர்க்க காலிப் பணியிடங் களை உடனடியாக நிரப்ப வேண்டும்” என ஊழியர்கள் தெரிவித்தனரர்.