

தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி வரைவாளர், தட்டச்சர் பதவிகளுக் கான எழுத்துத் தேர்வு வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் நேரடி பணி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ள உதவி வரைவாளர், தட்டச்சர், இளநிலை தணிக்கையாளர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பித்தோர் நுழைவுச் சீட்டை tangedco.directrecuitment.in என்ற இணையதளத்துக்கு பதிலாக www.tangedcodirectrecuitment.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044- 22358311 / 044-22358312 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.