மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினர்: 5-ம் தேதிக்குள் ஊதியம் வழங்க கோரிக்கை

மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினர்: 5-ம் தேதிக்குள் ஊதியம் வழங்க கோரிக்கை
Updated on
1 min read

மாதந்தோறும் 5-ம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் (செங் கொடி சங்கம்) ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

சென்னை மாநகராட்சியில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் 5-ம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும், சென்னை மாநகராட்சி யுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் பணிபுரிந்த 908 தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மாநகராட்சி செங்கொடி சங்கத்தினர் கோரிக்கை விடுத் திருந்தனர். மாநகராட்சி ஆணை யர் தலைமையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், இரு கோரிக்கைகளும் நிறைவேற்றப் படும் என்று கடந்த பிப்ரவரியில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிறைவேற்றப்பட வில்லை. மேலும் ஒப்பந்த தொழி லாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை துப்புரவு தொழி லாளர்கள் வலியுறுத்தி வரு கின்றனர்.

இந்நிலையில், அரசின் கவ னத்தை ஈர்க்கும் விதமாக மாநக ராட்சி துப்புரவு தொழிலாளர்கள் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று மாலை உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். இது தொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலர் பி.ஸ்ரீனிவாசலுவிடம் கேட்ட போது, “மாநகராட்சி நிர்வாகம் உறுதியளித்தும் இதுவரை நிறை வேற்றப்படாத கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இந்த உள் ளிருப்பு போராட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.

மாநகராட்சி ஆணையர் எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். எங்கள் கோரிக் கைகளை ஏற்பதாக உறுதியளிக்க வேண்டும். அதுவரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும்” என்றார். அதை தொடர்ந்து நேற்றிரவு முதல் அங் கேயே தங்கி உண்டு, உறங்கும் போராட்டத்தையும் நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in