மதக்கலவரங்களில் பலியாகிறவர்கள் குடும்பத்துக்கான இழப்பீடு உயர்வு

மதக்கலவரங்களில் பலியாகிறவர்கள் குடும்பத்துக்கான இழப்பீடு உயர்வு
Updated on
1 min read

மதக்கலவரங்களில் பலியாகிறவர்களின் குடும்பத்துக்கான இழப்பீடை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மதக்கலவரங்கள், நக்சல் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் பலியாகும் போது, அவர்கள் குடும்பத்துக்கு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கி வந்தது.

இந்நிலையில், மதக்கலவரங்களில் பலியாகிறவர்களுக்கான இழப்பீடை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மதக்கலவரங்கள், நக்சல் தாக்குதல்களில் பலியாகும் அப்பாவி பொதுமக்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.3 லட்சத்தில் ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in