

பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்ததால் நாளை (மே 15) முதல் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளனர். இதனால் கூடுதல் மின்சார ரயில்களை இயக்க தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழக அரசின் கோரிக்கைக்கு இணங்க இந்த அறிவிப்பை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது .
இதன் படி செங்கல்பட்டு-தாம்பரம்-சென்னை கடற்கரை மற்றும் சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு தடங்களில் கூடுதலாக 9 ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
அதே போல் வேளச்சேரி-சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 10 கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை கடற்கரை/எம்.எம்.சி.-ஆவடி-திருவள்ளூர் தடத்தில் கூடுதலாக 9 ரயில்களும்
சென்னை கடற்கரை/எம்.எம்.சி- ஆவடி- பொன்னேரி தடத்தில் கூடுதலாக 8 ரயில்களும்
இந்த கூடுதல் ரயில்களினால் மேலும் 52,000 பயணிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.