

திருவான்மியூர் கலாஷேத்ரா சாலை யில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலிருந்து 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொது இடத்தில் குப்பை கொட்டுவதால், அப்பகுதி வாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருவான்மியூர் கலாஷேத்ரா பிரதான சாலையில் (சென்னை மாநகராட்சி வார்டு 181), சிவசுந்தரம் அவென்யூ 2-வது தெருவில் பூங்கா ஒன்று உள்ளது. அதன் மேற்கு பகுதியில் பல ஆண்டுகளாக குடியி ருப்புகள் இல்லை. அதனால் பூங்காவின் கிழக்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் 100-க்கும் மேற் பட்ட குடும்பத்தினர், குப்பையை பூங்காவின் மேற்கு பகுதியில் பல ஆண்டுகளாக கொட்டி வரு கின்றனர். மேற்கு பகுதியில் தற்போது குடியிருப்புகள் வந்து விட்ட நிலையிலும், அங்கு குப்பை கொட்டுவது தொடர்கிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால், அப்பகுதி வாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது தொடர்பாக பூங்காவின் மேற்கு பகுதியில் வசிக்கும் கே.நாராயணன் கூறும்போது, “பூங்காவின் கிழக்கு பகுதி குடியி ருப்பில் மொத்தம் 180 குடும்பங்கள் வசித்து வருகின்ற. அவர்களது பகுதியில் போதுமான காலி இடம் உள்ள நிலையில், அவர்கள் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ளும் நோக்கில், பூங்காவின் மேற்கு பகுதியில், நாங்கள் வசிக்கும் தெருவில் குப்பையை கொட்டு கின்றனர். அதிலிருந்து வெளியாகும் துர்நாற்றத்தால் அவ்வழியாக செல்லவே முடியவில்லை. எனவே அங்கு குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்” என்றார்.
அதே பகுதியைச் சேர்ந்த கே.செந்தில்குமார் கூறும்போது, “பூங்காவின் மேற்கு பகுதியில் 2 குப்பைத் தொட்டிகள் வைக்கப் பட்டுள்ளன. பூங்காவின் கிழக்கு பகுதி குடியிருப்புகளில் உருவாகும் குப்பையை, பெரிய டின்களில் போட்டு, தள்ளுவண்டியில் கொண்டு வந்து, எங்கள் பகுதி யில் நிறுத்திவிடுகின்றனர். மாநகராட்சி வண்டி வந்து ஏற்றிச் செல்லும் வரை, துர்நாற்றத்தை சகித்துக்கொள்ள வேண்டியுள்ளது. அதிக குப்பையால் சாலை குறுகி, போக்குவரத்தும் பாதிக்கப் படுகிறது. எனவே குப்பையை, குப்பை வண்டி வரும்போது, அதில் போடுமாறு மாநகராட்சி அறி வுறுத்த வேண்டும்” என்றார்.
குடியிருப்புவாசி லட்சுமி கூறும்போது, “எங்கள் பகுதியில் குப்பையை கொட்டுவதால், கொசுத் தொல்லை, ஈக்கள் தொல்லை, நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் நாங்கள் கடும் அவதிக்குள்ளாகிறோம். எனவே அங்கு குப்பை கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்” என்றார்.
இது தொடர்பாக மாநகராட்சியின் அடையாறு மண்டலத்தைச் சேர்ந்த அதிகாரியிடம் கேட்டபோது, “பூங்கா அருகில் குப்பை கொட்டும் குடியிருப்புவாசிகளுக்கு உரிய அறிவுரை வழங்கி, அங்கு குப்பை கொட்டுவது தடுக்கப்படும். அவர்கள் பகுதியிலேயே சேமித்து வைத்து, குப்பை வாகனம் வரும்போது, அதில் கொட்ட ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.