

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர் தலுக்காக அதிமுகவில் 152 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர்.
இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழு வில் கட்சியின் தலைமை நிலையச் செயலாளரும் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையன், பொருளாளர் திண்டுக்கல் சி.சீனி வாசன், அமைப்புச் செயலாளர் ஆர்.வைத்திலிங்கம், செய்தித் தொடர்புக்குழு உறுப்பினர் பண் ருட்டி எஸ்.ராமச்சந்திரன், கொள்கை பரப்புச் செயலாளர் மு.தம்பிதுரை, தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள் ளாச்சி வி.ஜெயராமன் உட்பட அனைத்து அமைச்சர்கள், எம்பிக் கள், எம்எல்ஏக்கள், கட்சி மூத்த நிர்வாகிகள் அடங்கிய 152 பேர் உள்ளனர். கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும்.