

நெய்வேலி நிலக்கரி நிறுவனத் தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. தொழிற்சங் கங்கள் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் என்.எல்.சி. மனித ஆற்றல் துறை சார்பில் உயர் நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
“பணியாற்ற விருப்பமுள்ள ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் களைக் கொண்டு, என்.எல்.சி. நிறு வனப் பணிகள் இடையூறு இன்றி நடைபெறும் வகையில் தமிழக அரசு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்” என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி வி.ராமசுப் பிரமணியன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சுமார் 600 பேரைக் கொண்ட போலீஸ் படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசு கூடுதல் வழக்கறிஞர் பி.சஞ்சய் காந்தி நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.