இக்கட்டான சூழலிலும் சென்னை சில்க்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு மீண்டும் பணி

இக்கட்டான சூழலிலும் சென்னை சில்க்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு மீண்டும் பணி
Updated on
1 min read

தீ விபத்தால் பெரும் இழப்பை சந்தித்துள்ள சூழலிலும், சென்னை சில்க்ஸ், குமரன் தங்க நகை மாளிகை கடைகளில் பணியாற்றிவந்த ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாத சம்பளமும் அவர்களுக்கு உடனடியாக வழங்கப்பட்டது.

தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் விபத்து ஏற்பட்டு கட்டிடம் முற்றிலும் சேதம் அடைந்தது. இதைத் தொடர்ந்து, அங்கு பணிபுரிந்த 1,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு கடந்த மாதம் பணி செய்ததற்கான சம்பளம் கிடைக்காது என எண்ணினர். ஆனால், இக்கட்டான சூழலிலும் சென்னை சில்க்ஸ் நிர்வாகம் உடனடியாக அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு சம்பளத்தையும் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்டு முற்றிலும் சேதம் அடைந்த சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடை மற்றும் குமரன் தங்க நகை மாளிகை ஆகியவற்றில் பணி செய்தவர்கள் அவரவர் சொந்த ஊருக்கு அருகே உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவன கிளையில் தற்போது எந்த பணி, என்ன பிரிவில் இருந்தார்களோ அதே பணியில் மீண்டும் சேர்ந்துகொள்ளலாம். புதிய கட்டிடம் கட்டிய பிறகு அவர்களுக்கு தகுந்த பணி ஒதுக்கீடு செய்யப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற நிறுவனங்களின் ஆதரவு

சென்னை சில்க்ஸ் நிறுவனம் விபத்துக்கு உள்ளானதைத் தொடர்ந்து அப்பகுதியில் 3-வது நாளாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. சேதமடைந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் அதிக அளவிலான தங்கம், வைர நகைகள் இருப்பதால் 24 மணிநேரமும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் போலீஸாருடன் சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ் உள்ளிட்ட நிறுவன பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். போலீஸாருக்கு மோர் உள்ளிட்ட குளிர்பானங்களையும் அவர்கள் அவ்வப்போது வழங்கி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in