

பாளையங்கோட்டையில் போலீஸ் வாகனத்தை வழி மறித்து கைதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, 9 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், பழைய காயல் அருகே உள்ள புல்லா வெளியைச் சேர்ந்தவர் பாலசுப்பிர மணியன் என்ற சிங்காரம்(49). பசுபதி பாண்டியன் ஆதரவாள ரான இவர், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட் டிருந்தார்.
வழக்கு விசாரணைக்காக தூத் துக்குடி நீதிமன்றத்துக்கு, போலீஸ் வாகனத்தில் நேற்று முன்தினம் அழைத்துச் செல்லப்பட்டார். பாளையங்கோட்டை கேடிசி நகர் நான்குவழிச் சாலையில், கார் களில் வந்த 10-க்கும் மேற்பட் டோர், போலீஸாரின் வாகனத்தை வழிமறித்தனர். பாட்டிலில் கொண்டுவந்திருந்த மிளகாய்ப் பொடி கரைசலைச் தெளித்து, போலீஸாரை அவர்கள் நிலை குலையச் செய்தனர். வாகனத்தில் இருந்த சிங்காரத்தை வெளியே இழுத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். படுகாய மடைந்த சிங்காரம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்தார்.
கொலையாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட் டுள்ளன. இவர்கள் நடத்திய விசாரணையில், கொலையாளி கள் 3 கார்களில் வழக்கறிஞர்கள் என்று போலி ஸ்டிக்கரை ஒட்டி வந்தது தெரியவந்துள்ளது. அதில், ஒரு கார் தாழையூத்து நான்குவழிச் சாலை பாலத்தின் கீழ்புறம் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காரில் இருந்து 2 அரிவாள், 3 கத்திகள் மற்றும் இரும்பு பைப் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர்.
பாளையங்கோட்டை அருகே வி.எம்.சத்திரம் காட்டுப்பகுதியில் ஒரு காரையும், தூத்துக்குடி மாவட்டம் சிவத்தையாபுரம் - ஏரல் சாலையில் வடக்கு கால்வாய் அருகே மற்றொரு காரையும் போலீஸார் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட கார்கள் சுபாஷ் பண்ணையாரின் ஆதர வாளர்களுக்கு சொந்தமானவை என்பதும், அதில் உள்ள பதிவு எண்கள் போலி என்பதும் தெரிய வந்தது. கொலை தொடர்பாக 9 பேரை பிடித்து விசாரித்து வரு வதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில், சிங்காரத்தின் உடலை வாங்க மனைவி பார்வதி மற்றும் உற வினர்கள் மறுத்துவிட்டனர். கொலையாளிகளை கைது செய்ய வேண்டும், சிங்காரம் குடும்பத் துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.