Published : 22 Jun 2017 08:54 AM
Last Updated : 22 Jun 2017 08:54 AM
இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பிஇ, பிடெக். படிப்பு களில் சேர ஒரு லட்சத்து 40 ஆயி ரம் மாணவர்கள் விண்ணப்பித் துள்ளனர். அவர்கள் அனைவருக் கும் செவ்வாய்க்கிழமை அன்று கணினி மூலம் ஆன்லைனில் ரேண் டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாண வர்களின் தரவரிசை பட்டியல் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாலை 4 மணியளவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தரவரிசைப் பட்டியலை வெளி யிடுகிறார்.
ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பின்படி முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 27-ம் தேதி தொடங்கப்பட வேண்டும். ஆனால், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வுக்கு ஏற்ப பொறியியல் கலந்தாய்வு தேதி மாற்றியமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு சற்று தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT