Published : 04 Sep 2016 12:03 PM
Last Updated : 04 Sep 2016 12:03 PM

சதுர்த்தி, முகூர்த்த நாட்களால் மல்லிகை பூ கிலோ ரூ.1000; இந்த ஆண்டில் அதிகபட்ச விலை

விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாட்கள் காரணமாக மல்லிக்கைப் பூ ஒரு கிலோ நேற்று ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த ஆண்டில் இதுவே மிக அதிக விலை என வியாபாரிகள் தெரி வித்தனர்.

இன்று முகூர்த்த நாள். நாளை விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாள். இதனால் பூக்கள் தேவை அதிகரித்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிற்கு மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்க ப்படுகிறது.

மதுரை மல்லியும் அதிகளவில் இங்குதான் கிடைக்கும். முகூர்த்தம், சதுர்த்தி காரணமாக நேற்று காலை முதலே பூ மார்க்கெட்டில் கூட்டம் அதிகம் இருந்தது.

விடிய, விடிய மக்கள் பூக்களை வாங்கிச் சென்றனர். தேவை மிக அதிகம் இருந்தால் விலை கடுமையாக இருந்தது.

இது குறித்து மதுரை பூ மார்க்கெட் சங்கத் தலைவர் ராமச் சந்திரன் கூறியதாவது:

வழக்கமாக இதுபோன்ற பூஜை நாட்களில் மல்லிகைப் பூ 10 முதல் 15 டன் வரை வரத்து இருக்கும். இந்தாண்டில் மழை தேவையானபோது பெய் யவி ல்லை. தேவையில்லாத நேரத்தில் பெய்ததால் மல்லிகை விளைச்சல் கடுமையாகப் பாதி த்துள்ளது. மிகச்சிலரது தோட் டங்களில் மட்டுமே மல்லிகை கிடைக்கிறது.

இதனால் நேற்று தேவை அதிகம் இருந்தும் ஒரு டன் அளவுக்கே மல்லிகைப் பூ வந்தது. எனவே ஒரு கிலோ ரூ.1000 வரை விற்றது. இருப்பினும் பூக்கள் கிடைக்கவில்லை.

இந்த ஆண்டில் மல்லிகைப் பூ நேற்று தான் அதிகபட்ச விலையில் விற்ப னையானது.

நேற்று ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.800, மெட்ராஸ் மல்லி ரூ.1000, சம்பங்கி ரூ.500, ரோஜா ரூ.200, பட்டு ரோஜா ரூ.400, கனகாம்பரம் ரூ.600, கலர் பூக்கள் ரூ.200 என்ற விலையில் விற்பனையானது. நேற்று முன்தினம் பட்டு ரோஜா ரூ.40, கலர் பூ ரூ.40, இதர பூக்கள் அதிகபட்சம் ரூ.200 என்ற அளவில்தான் விற்பனையானது.

இன்றும், நாளையும் இந்த விலை உயர்வு நீடிக்கும். வரும் செவ்வாய்க்கிழமை முதல் விலை இறங்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x