

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு சார்பில் கடந்த 2015-ல், தமிழ்நாடு தெருவோர வியாபாரிகள் விதிகள் உருவாக்கப்பட்டன.
இவற்றின் கீழ் சென்னை மாநகரிலுள்ள தெரு வியாபாரிகளின் நலன் கருதி திட்டம் தீட்டுதல், தெரு வியாபாரிகளின் கணக்கெடுப்பு, நிபந்தனைக்குட்பட்டு தகுதி யுடையவருக்கு சான்றிதழ் வழங்குதல், வியாபார வாரியாக வகைப்படுத்துதல், அடையாளச் சான்றிதழ் வழங்குதல், சுற்றுப் புறச் சூழலை தூய்மைப்படுத்துதல் இதர பணிகளுக்கான விதிகள் ஆகி யவை வரையறுக்கப்பட்டுள்ளன.
அதை நடைமுறைபடுத்தும் விதமாக, முதல்கட்ட பணியாக மாநகராட்சி எல் லைக்குட்பட்ட 15 மண்டலங்களில் தெரு வோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு பணி மென்பொருள் வாயிலாக நாளை முதல் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.