

மணப்பாறை பகுதியில் உள்ள வளநாடு கைகாட்டி அருகே கடந்த 12-ம் தேதி மினி லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதியது.
இந்த விபத்தில், மினி லாரியில் பயணம் செய்த திண்டுக்கல் மாவட்டம் அம்மா பட்டி பகுதியில் உள்ள மலைக் கேணியைச் சேர்ந்த 10 பேர் இறந்தனர். 48 பேர் காய மடைந்து திருச்சி மற்றும் மணப்பாறையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந் நிலையில், அம்மா பட்டி மலைக்கேணியைச் சேர்ந்த வீரமலை(55), திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.