

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்றுமுதல் அடுத்த 3 நாட்களுக்கு தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, “தென் மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் தென் கடலோர மாவட்டங்களில் இன்றுமுதல் அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
தமிழகத்தின் இதர பகுதிகளிலும் புதுச்சேரியிலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்” என்றார்.