கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைவு: தக்காளி கிலோ ரூ.45 ஆக உயர்வு
கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்வதாலும், அங்கிருந்து வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாலும், கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.45 ஆக உயர்ந்துள்ளது.
இந்திய அளவில் தக்காளி உற்பத்தியில் தமிழகம் 9-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் தக்காளி தேவையை ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங்களே பூர்த்தி செய்து வருகின்றன. இந்த மாநிலங்களின் நடவு மற்றும் அறுவடை பருவம், மழை மற்றும் வறட்சி போன்ற தட்ப வெப்பநிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில், கோயம்பேடு மார்க்கெட்டுக்கான தக்காளி வரத் தும், அதன் விலையும் முடிவாகி றது. கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து கோயம் பேடு சந்தைக்கு தக்காளி வரத்து தற்போது குறைந்திருப்பதால், அவற்றின் விலை உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக கோயம்பேடு தக்காளி வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.தியாகராஜனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
கோயம்பேடு சந்தையை பொறுத்தவரை, கர்நாடக மாநிலத் தில் சீனிவாசபுரம், சிந்தாமணி, கோலார், ஆந்திர மாநிலத்தில் மதனபள்ளி, புங்கனூர் ஆகிய பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் வருகிறது.
தக்காளி சாகுபடியை பொறுத்த வரை மழை பெய்தால், பூக்கள் உதிர்ந்து, விளைச்சல் குறையும். மேகமூட்டமான சூழல் தான் நல்ல மகசூலை கொடுக்கும். ஆனால் தற்போது இரு மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக சாகுபடி குறைந்து, வரத்தும் குறைந்துள்ளது.
அதுமட்டுமல்லாது, தற்போது வட மாநிலங்களில் தக்காளி உற்பத்தி குறைந்ததை அடுத்து, அங்கிருந்து, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலத்துக்கு வந்து தக்காளி வாங்கிச் செல் கின்றனர். அதன் விளைவாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து 80 லாரியிலிருந்து, 40 லாரியாக குறைந்துள்ளது. அதன் காரணமாக, கடந்த வாரம் ரூ.25 ஆக இருந்த முதல் தர தக்காளியின் விலை நேற்று ரூ.45 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.115 ஆகவும், வெண் டைக்காய் ரூ.35 ஆகவும், பீன்ஸ் ரூ.60 ஆகவும் உயர்ந்துள்ளது.
