மோடி அரசின் 3 ஆண்டு கால சாதனைகள்: ஸ்டிக்கர் வெளியிட்டது தமிழக பாஜக

மோடி அரசின் 3 ஆண்டு கால சாதனைகள்: ஸ்டிக்கர் வெளியிட்டது தமிழக பாஜக
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு இன்று தனது நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனைக் கொண்டாடும் விதமாக தமிழக பாஜகவினர் சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஸ்டிக்கர் வெளியிட்டுக் கொண்டாடினர்.

இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலர் ஹெச்.ராஜா மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின்போது மோடி உருவம் பதித்த ஸ்டிக்கர் வெளியிடப்பட்டது. ஆளும் மத்திய பாஜக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

4-ம் ஆண்டு தொடக்கம்

பாஜகவின் 4-ம் ஆண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, அசாம் மாநிலத்தில் பல்வேறு புதிய உட்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

'மோடி பெஸ்ட்' என்ற பெயரில் அடுத்த 20 நாட்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை பாராட்டும் வண்ணம் நாடு முழுவதும் 900 நகரங்களில் கோலாகலமான நிகழ்ச்சிகளை நடத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மே 26-ம் தேதி பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

படங்கள்: க.ஸ்ரீபரத்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in