ஈரான் நாட்டு சிறையில் வாடும் 35 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

ஈரான் நாட்டு சிறையில் வாடும் 35 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
Updated on
1 min read

பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி எழுதிய கடிதம்:

வெளிநாடுகளில் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 35 மீனவர் கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஈரான் கடலோரக் காவல் படையினரால் சிறைப்பிடிக்கப் பட்டு பரிதவிக்கும் நிலை பற்றி தங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

இந்த மீனவர்கள் பஹ்ரைன், ஐக்கிய அரசு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய கடல் பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது வழிமாறிச் சென்றதால் ஈரான் கடலோரக் காவல்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு நீண்டகால மாக சிறையில் வாடுகின்றனர்.

தமிழக மீனவர்கள் தங்கள் வாழ் வாதாரத்துக்காக வெளிநாடு களுக்குச் சென்று அங்குள்ள உள்ளூர் தொழிலதிபர்களிடம் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், முதலாவது சம்ப வத்தில், கன்னியாகுமரி மாவட் டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் சவுதி அரேபியா கடல் பகுதியில் கடந்தாண்டு ஆகஸ்டு 5-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது வழிமாறி ஈரான் கடல்பகுதிக்குச் சென்றதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இரண்டாவது சம்பவத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் 3 விசைப்படகுகளில் கடந்தாண்டு செப்டம்பர் 20-ம் தேதி மீன்பிடித்து கொண்டிருந்தபோது வழிமாறி ஈரான் கடல்பகுதிக்குச் சென்றதால் சிறை பிடிக்கப்பட்ட னர். ஈரான் நாட்டு நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையை தமிழக மீனவர்கள் செலுத்திவிட்ட போதிலும், அவர்களை ஈரான் நாட்டு அதிகாரிகள் விடுவிக்க வில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

மூன்றாவது சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் கடந்தாண்டு டிசம்பர் 27-ம் தேதி துபாயில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது வழிமாறி ஈரான் கடல் பகுதிக்குள் நுழைந்ததால் கைது செய்யப்பட்டனர்.

இந்த 35 மீனவர்களும் நீண்ட காலமாக சிறைவைக்கப்பட்டிருப்ப தால் தமிழகத்தில் உள்ள அவர் களது குடும்பத்தினர் பொருளா தார ரீதியாக பெரிதும் பாதிக்கப் பட்டிருப்பதுடன், பெரும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ள னர். எனவே, இந்த விஷயத்தில் தாங்கள் உடனடியாகத் தலை யிட்டு தமிழக மீனவர்களைச் சட்டப் படி விடுவிக்க விரைந்து நட வடிக்கை எடுக்க வேண்டும்.

மற்றொரு கடிதம்

பிரதமருக்கு முதல்வர் எழுதிய மற்றொரு கடிதம்:

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜார்ஜ், நேவில், ஜோசப் ஆகிய மூவரும், சவுதி அரேபியாவைச் சேர்ந்த மீன்பிடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். கடந்த 18-ம் தேதி மீன்பிடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில், மூவரும் கடலில் மூழ்கினர். அதில் ஜார்ஜ், ஜோசப் ஆகியோர் உடல் கிடைத்துவிட்டது. நேவில் உடல் இதுவரை கிடைக்வில்லை. அவரது உடலைத் தேடி கண்டுபிடிக்கவும், பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்துக்கு அந்த நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு பெற்றுத்தரவும் சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in