Published : 03 Jan 2016 12:54 PM
Last Updated : 03 Jan 2016 12:54 PM

மனிதநேயம் மாண்டுவிடவில்லை: ‘புதிய தலைமுறை’ சத்யநாராயணன் உருக்கம்

மழை வெள்ளத்தால் சென்னை மக்கள் வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவே போராடியபோது, கள மிறங்கி அவர்களைக் காப்பாற்றி, மண்ணில் மனிதநேயம் இன்னும் மாண்டுவிடவில்லை என்று இந்த உலகுக்கு நீங்கள்தான் உணர்த் தினீர்கள்.

சென்னை போன்ற பெருநகரங்க ளில் வாழும் மக்களைப் பற்றி பொதுவாகவே ஒரு பிம்பம் உண்டு. அண்டை வீட்டார் யார் என்றுகூட தெரியாத அளவுக்கு சமூக அக்கறை இல்லாதவர்கள், இன்றைய இளைஞர்கள் இணை யத்தில், முகநூலில், வாட்ஸ்-அப் போன்றவற்றில் வெட்டியாய் நேரம் கழிப்பவர்கள் என்பதுபோன்ற பிம்பம் உண்டு.

இந்த இரண்டு பிம்பங்களையும் உடைத்தெறிந்து, ‘சென்னை நகரவாசிகளுக்கும், இன்றைய இளைஞர்களுக்கும் இதயம் உண்டு. அதில் ஈவும், இரக்கமும் உண்டு’ என்று இந்த உலகுக்கு உணர்த்தியவர்கள் நீங்கள். அதனால், ‘யாதும் ஊரே’ திட்டத் தின் உயிர்நாடியே நீங்கள்தான் என்று கருதுகிறோம்.

மழை வெள்ள பாதிப்பின்போது உங்களிடையே ஒரு எழுச்சி வந்தது. அதைக் கண்டு இந்த உல கமே வியந்தது. அந்த எழுச்சி அடங்குவதற்கு முன்பு, உங்களுக் குள் ஏற்பட்ட அந்த தீ அணையும் முன்பு அதை அடைகாத்து, உயிர்கொடுக்க வேண்டும் என எண்ணியதால் ஏற்பட்ட விளைவே இந்த ‘யாதும் ஊரே’ திட்டம். மழை வெள்ள மீட்பு பணிக் காக இணைந்த நீங்கள் மீண்டும் பிரிவதற்கு முன்பு, உங்கள் மன தில் ஏற்பட்ட ஈரம் காயும் முன்பு, உங்களுக்குள் ஒரு பாலம் அமைக்க வேண்டும் என எண்ணி னோம்.

இத்திட்டம் தொடங்கியதோடு எங்கள் வேலை முடிந்துவிட வில்லை. நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய், என்றும் உறு துணையாய் உங்களுடனே தொடர்ந்து பயணிப்போம். ஆதா யம் தேடாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட நீங்கள் முன்வந்திருக்கிறீர்கள். நாங்களும் அப்படியே முன்வந்திருக்கிறோம். அதனால், இந்த திட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x