ராஜீவ் காந்தி 26-வது நினைவுநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மலரஞ்சலி

ராஜீவ் காந்தி 26-வது நினைவுநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மலரஞ்சலி
Updated on
2 min read

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு பெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சென்னை சத்தியமூர்த்தி பவனிலும் அவரது படத்துக்கு திருநாவுக்கரசர் உள் ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 26-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் ராஜீவ் காந்தியின் உருவப் படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. காலை 8 மணியளவில் ராஜீவ் காந்தி படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, எம்எல்ஏக்கள் வசந்தகுமார், கே.ஆர்.ராமசாமி, முன்னாள் எம்பி ஆரூண் உள் ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களி டம் பேசும்போது, “நாட்டின் நலனுக் காக பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி நாட்டை முதன் மையான இடத்துக்கு கொண்டு சென்றவர் ராஜீவ் காந்தி.

ஜனநாயக நாட்டில் அரசியலுக்கு யார் வேண்டு மானாலும் வரலாம். ரஜினி அரசி யலுக்கு எப்போது வருவார் என்பதை அவர் விளக்க வேண்டும். தமிழ்நாட்டில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுகவை பிரித்து ஆதாயம் தேட முயற்சி செய்யும் பாஜகவின் திட்டம் நிறைவேறாது’’ என்றார்.

பெரும்புதூரில் உள்ள ராஜீ்வ் காந்தி நினைவிடத்தில் நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலை வர் திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்க பாலு, முன்னாள் எம்பிக்கள் பீட்டர் அல்போன்ஸ், ஆரூண், எம்எல்ஏ வசந்தகுமார், ராஜீவ் காந்தி நினை விட சீரமைப்புக் குழு உறுப்பினர் முருகானந்தம், காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் வி.ஆர்.சிவ ராமன், பெரும்புதூர் நகர காங் கிரஸ் பொறுப்பாளர் அருள்ராஜ் உள் ளிட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி கள் பொறுப்பாளர்கள் ஏராளமா னோர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தனர்.

தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி

முன்னதாக தமிழ்நாடு காங் கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரஸார் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதை யடுத்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், பாகிஸ் தான் ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டி, சேலம் மாவட்டம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த முருகன், திருவாரூர் மாவட்டம் நெடும்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த பத்மநாபன் ஆகியோர் குடும்பங்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.

மேலும் காங்கிரஸ் கட்சி யின் பேச்சாளர்கள் 150 பேருக்கு விபத்து காப்பீட்டு திட்டத்துக்காக ரூ.52 ஆயிரம் நிதியுதவி வழங் கப்பட்டது. முன்னதாக கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்க தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஜோதி எடுத்துவந்து ராஜீவ் காந்தி நினைவிடத்தில் வைத்தனர். தொடர்ந்து சர்வமத பிரார்த்தனை நடந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in