பப்ஸ் சாப்பிட்ட 2 பேருக்கு வாந்தி, மயக்கம்: பிளாஸ்டிக் முட்டையால் தயாரிக்கப்பட்டதா? - சினிமா தியேட்டரில் அதிகாரிகள் சோதனை

பப்ஸ் சாப்பிட்ட 2 பேருக்கு வாந்தி, மயக்கம்: பிளாஸ்டிக் முட்டையால் தயாரிக்கப்பட்டதா? - சினிமா தியேட்டரில் அதிகாரிகள் சோதனை
Updated on
1 min read

திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் உள்ள சினிமா தியேட்டரில் நேற்று முன்தினம் இரவுக் காட்சிக்கு திருவள்ளூர் ஏரிக் கரை பகுதியைச் சேர்ந்த நண்பர்களான சூர்யா, அஜீத், சிரஞ்சீவி ஆகியோர் சென்றனர். அங்கு இடைவேளையின்போது கேன்டீனில் விற்ற முட்டை பப்ஸை வாங்கி சாப்பிட்டனர்.

அதனை சாப்பிடும் போது பிளாஸ்டிக்கை சாப்பிடுவது போல் கடினமாக இருப்பதாக சந்தேகம் எழவே கேன்டீன் ஊழியர்களிடம் கேட்டுள்ளனர். அவர்கள் அதெல் லாம் ஒன்றுமில்லை எனக் கூறவே சூர்யா, அஜீத் இருவரும் சாப்பிட்டுள்ளனர். சிரஞ்சீவி சாப்பிடவில்லை. இந்நிலையில் சிறிது நேரம் கழித்து இருவருக்கும் திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர்.

அத்துடன், வயிற்றுப்போக்கு ஏற்படவே உனடியாக நண்பர்களை வரவழைத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்த்தனர்.

இதற்கிடையே, அவர்கள் சாப்பிட்ட பப்ஸ் பிளாஸ்டிக் முட்டை யால் செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தியேட்டரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத் துக்கு வந்த மணவாள நகர் போலீ ஸார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், கேன்டீன் உரிமையாளர் மற்றும் விற்பனையாளர்களிடம் தீவிர மாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதனிடையே உணவு பாது காப்பு அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதில் கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in