மாணவி மாயமான வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பம்: கிணற்றில் எடுக்கப்பட்ட ஆடை, மனித எலும்புகள்

மாணவி மாயமான வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பம்: கிணற்றில் எடுக்கப்பட்ட ஆடை, மனித எலும்புகள்
Updated on
1 min read

புதுக்கோட்டை அருகே மாணவி ஒருவர் காணாமல் போன வழக்கில் கடந்த 2 ஆண்டுகளாக துப்பு கிடைக்காத நிலையில் கிணறு ஒன்றில் இருந்து சிக்கிய ஆடை, மனித எலும்புகள் மாணவி மாயமான வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள தெட் சிணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி. கூலித் தொழிலாளியான இவரது மகள் சிவசங்கரி (16). புதுக்கோட்டையில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2012 மே 19-ம் தேதி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தந்தைக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு புறப் பட்டவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. எங்கு தேடியும் கிடைக்க வில்லை.

இந்நிலையில், தோட்டத்தில் இருந்த பாசனக் கிணற்றின் கரை யில் சிவசங்கரியின் செருப்பு கிடந்ததால், சந்தேகத்தின்பேரில் கிணற்றுக்குள் தீயணைப்பு படையினர் தேடிப் பார்த்தனர். இருப்பினும் எதுவும் சிக்கவில்லை. ஆலங்குடி போலீ ஸார் மாணவி மாயம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த விசாரணையில் முன் னேற்றம் இல்லாததால் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மாணவியின் பெற்றோர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி யின் உத்தரவுபடி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், சிவசங்கரியின் செருப்புகள் கிடந்ததாக கூறப்பட்ட கிணற்றில் இருந்து தண்ணீரை வெள்ளிக்கிழமை மோட்டார் மூலம் இறைத்து வெளியே ஊற்றப்பட்டது. பின்னர் டிஐஜி கணேசமூர்த்தி, டிஎஸ்பி மணி, தடயவியல் ஆய் வாளர் மஞ்சுளாதேவி உள்ளிட்டோர் கிணற்றை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து இயந்திரம் மூலம் கிணற்றை சுமார் 7 அடி வரை தூர் வாரப்பட்டது. அப்போது சுடிதார், தலையில் அணியும் கிளிப், வளையல்களும் இவற்றுடன் மனித எலும்புகளும் சிக்கின. அவற்றை கைப்பற்றிய போலீஸார் அவை சிவசங்கரி மாயாமானபோது அணிந்திருந்தவைதான் என்பதை பெற்றோரிடம் காண்பித்து உறுதி செய்தனர். தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘கிணற்றுக்குள்தான் சிவசங்கரியின் உடல் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய் தோம். எங்கள் கணிப்பு வீணாக வில்லை. மரபணு சோதனைக்குப் பிறகு சிவசங்கரியின் உடல்தானா என்பதை உறுதி செய்வோம்’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in