

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக வனத்துறை ஊடக கல்வியியல் மையம் (சிஎம்எஸ்) சார்பாக புதுச்சேரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு திரைப்பட விழா இன்று தொடங்குகிறது.
இது குறித்து சிஎம்எஸ் நிர்வாகி பிரியா தல்வார் நேற்று கூறும் போது, “சிஎம்எஸ் சார்பாக நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் சர்வதேச சுற்றுச்சூழல் விழிப்பு ணர்வு திரைப்பட விழா நடத்தப் பட்டு வருகிறது. அதன்படி, புதுச் சேரியிலும் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்துவதற்காக இந்த திரைப்பட விழா நடைபெறு கிறது. புதுவையில் இன்று மாலை ஆனந்தா இன் ஹோட்டலில் விழாவை சுற்றுச் சூழல் துறை அமைச்சர் தியாகராஜன் தொடங்கி வைக்கிறார்.
புதுச்சேரியில் பசுமையைக் காக்க பாடுபட்ட 3 பேர் கவுரவிக்கப்படுகின்றனர். கல்பனா சுப்பிரமணியம் இயக்கிய, ‘தி டர்ட்டில்ஸ் இன் ஏ சூப்’ படம் முதலில் திரையிடப்படும். புதுவை பல்கலைக்கழகம், ஆரோவில் உட்பட 16 மையங்களில் படங்கள் திரையிடப்பட உள்ளன. மேலும், திரைப்பட உருவாக்கம் குறித்த
பயிலரங்கம், கடற் கரை தூய்மை, வாசகம் எழுதும் போட்டி போன்றவை நடை பெறுகின்றன. சுற்றுச்சூழல் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறை, பாண்டிகேன், ஆரோ வில் போன்றவை இணைந்து நடத்தும் இந்த விழாவில் மொத் தம் 18 மையங்களில் 24 படங்கள் திரையிடப்படும். வரும் ஞாயிற்றுக்கிழமை வரை விழா நடைபெறுகிறது” என்றார்.