Published : 28 Mar 2017 09:14 AM
Last Updated : 28 Mar 2017 09:14 AM

துரோக கூட்டத்தின் முகத்திரையை கிழிப்பதே எனது லட்சியம்: ஜெ.தீபா ஆவேசம்

துரோக கூட்டத்தின் முகத்திரையை கிழித்து அவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதுதான் தனது லட்சியம் என எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா தெரிவித்தார்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா வின் அண்ணன் மகள் ஜெ.தீபா சுயேட்சையாக போட்டியிடுகிறார். பிற கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தை ஏற்கெனவே தொடங்கிய நிலையில், தனக்கு சின்னம் ஒதுக்கீடு செய்த பிறகு பிரச்சாரத்தை தொடங்க தீபா திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று அவருக்கு ‘படகு’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் வாக்களார்களுக்கு ‘படகு’ சின்னத்தை அறிமுகப்படுத்தி, தேர்தல் அறிக்கையை வெளி யிடும் பொதுக்கூட்டம் தண்டை யார்பேட்டை அருணாச்ச லேஸ்வரர் கோயில் தெருவில் நேற்று நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் சின்னத்தை அறிமுகப்படுத்தி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளர் தீபா பேசியதாவது: ஜெயலலிதா விட்டுசென்ற பணிகளை தொடர வேண்டும் என்பதும், துரோக கூட்டத்தின் முகத் திரையை கிழித்து அவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். எனவே, ஜெயலலிதா விட்டுச் சென்றப் பணிகளை விரைந்து நிறைவேற்ற என்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களை கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் பேசினார்.

காலதாமதமாக வந்த தீபா

தீபா பங்கேற்கும் பொதுக் கூட்டம் மாலை 6 மணியள வில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 8.45 மணிக்கு வந்த தீபா, இரவு 9.25 மணியளவில்தான் பேச தொடங்கினார்.

அப்போது ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்டிருந்த உரையை சுமார் 10 நிமிடங்கள் பேசிவிட்டு அங்கிருந்து தீபா புறப்பட்டுவிட்டார். இதனால், முதல் பொதுக்கூட்டத்தில் தீபா எவ்வாறு பேசப் போகிறார் என்று ஆவலோடு காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றனர்.

பொதுவாக ஜெயலலிதா பங்கேற்கும் கூட்டங்களில் பெண்கள் அதிக அளவில் திரண்டு இருப்பார்கள். ஆனால், தீபா பங்கேற்ற முதல் பொதுக்கூட்டத்துக்கு வந்த பெண்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே இருந் தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x