

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (என்.சி.பி.எச்) நடத்தும் மாநில அளவிலான புத்தக கண்காட்சி 31 இடங்களில் நாளை தொடங்குகிறது. இதில் 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் புத்தகங்களை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நியூ செஞ் சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் பொதுமேலாளர் தி.ரத்தின சபாபதி வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வாசிப்புப் பழக் கத்தைப் பரவலாக்கும் நோக்கில் தமிழகமெங்கும் பள்ளி, கல் லூரி உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் தொடர்ந்து புத்தகக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக உலக புத்தக தினத்தை ஒட்டி தமி ழகம் முழுவதும் 31 இடங்களில், வரும் 23-ம் தேதி (நாளை) முதல் 29-ம் தேதி வரை ஒரு வாரத்துக்கு சிறப்பு புத்தகக் கண்காட்சிகளை நடத்தவுள்ளது. கண்காட்சிகளில் காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை புத்தக விற்பனை நடைபெறும்.
சென்னையில், அண்ணா சாலை ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் விற்பனை நிலையம், கோட்டூரில் உள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம், அம்பத்தூர் கிளை நூலகம், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருநெல்வேலி, கோவை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம், ஊட்டி, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் விற்பனை நிலையங்களில் இந்த சிறப்பு புத்தகக் கண்காட்சிகள் நடைபெற உள்ளன.
மேலும் வேலூர், திருவள்ளூர், கோவை. திண்டுக்கல், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், ஆகிய பகுதி களில் இயங்கி வரும் மாவட்ட மைய நூலகங்கள், மதுரை திருமங்கலம், திருநகர் பகுதியில் இயங்கி வரும் கிளை நூலகங்கள், திருத்துறைப் பூண்டி பழைய பேருந்து நிலையம், புதுக்கோட்டை காந்தி பூங்கா, விழுப்புரம் பேருந்து நிலையம் அருகில், பூமாலை வளாகம் ஆகிய இடங்களிலும் புத்தகக் கண்காட்சிகள் நடை பெற உள்ளன.
50 சதவீதம் வரை தள்ளுபடி
இந்த கண்காட்சிகளில் கலை இலக்கியம் பண்பாடு, வரலாறு, திறனாய்வு, அரசியல், அறிவியல், சூழலியல், வேளாண்மை, மருத்துவம், கல்வியியல், மார்க்சிய பெரி யாரிய அம்பேத்கரிய நூல்கள், பொதுஅறிவு, சங்க இலக்கியம், பாரதி, பாரதிதாசன், திருக்குறள், சிறார் நூல்கள் கிடைக்கும். இக்கண்காட்சிகளில் 10 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.