

வரி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் பொது மக்களிடமிருந்து பெறப் படும் சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை பரா மரிப்பு கட்டணம் ஆகிய வரி வருவாய் இனங்கள் மூல மும், வரியில்லாத வருவாய் இனங்கள் மூலமும் பல்வேறு அடிப்படை வசதிகளும், பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளும் மேற்கொள் ளப்படுகின்றன. அதன்படி 2016-17-ம் நிதியாண்டுக்கான சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் பாதாளச் சாக்கடை பராமரிப்புக் கட்டணம் என ரூ.344.50 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது வரை ரூ.152.09 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளது.
வரும் 31.3.2017-க்குள் நடப்பு நிதியாண்டு முடிவதால் சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் பாதாள சாக்கடை பராமரிப்புக் கட்டணம் செலுத்தாதவர்களிடம் உடனடியாக வசூல் செய்வதற்கான நடவடிக்கையில் மாநகராட்சி ஊழியர்கள் இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி கூறியது: வரிகளை செலுத்தாதவர்களின் வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு, பாதாளச் சாக்கடை இணைப்பு துண்டிப்பு செய்யப்படு வதுடன் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நிலுவையில் உள்ள வரியில்லாத இனங்களுக்கு (கடைகள்) பூட்டி பொறுப்பு எடுத்து பொது ஏலத்துக்கு கொண்டு வரப்படும். பொதுமக்களின் வசதிக் காக மதுரை மாநகராட்சியின் 100 வார்டு பகுதிகளில் செயல்பட்டு வரும் 41 கணினி வரிவசூல் மையங்களிலும் பணமில்லா பரிவர்த்தனை மின்னணு இயந்திரம் மூலம் அனைத்து டெபிட், கிரடிட் கார்டுகள் கொண்டும் ஆன்லைன் மூலமும் வரிகள் செலுத்தலாம்.
மேலும் மார்ச் மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடு முறை நாட்களில் கணினி வரி வசூல் மையம் செயல்படும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாநகராட் சிக்கு செலுத்த வேண்டிய வரி களை செலுத்தி ஜப்தி நடவடிக்கை களை தவிர்க்க கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் என்றார்.