Published : 27 Sep 2016 09:25 AM
Last Updated : 27 Sep 2016 09:25 AM

சசிகலா புஷ்பா மீது புகார் அளிக்க உதவிய வழக்கறிஞருக்கு அதிமுகவில் சீட்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன் ஆகியோர் மீது போலீஸில் புகார் அளிக்க பின்புலமாக இருந்த வழக்கறிஞர் டி.ஜெனிக்கு, திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு அளித்துள்ளது.

பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்த ச.ராஜேஷ், கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில், சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன் ஆகியோர் மீது ரூ.20 லட்சம் மோசடி புகார் தெரிவித் தார்.

இதுபோல் கடந்த மாதம் 2 பெண்கள், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பாலியல் புகார் அளித்தனர்.

இவ்விரு புகார்களிலும் பின்புலமாக இருந்து, சம்பந்தப் பட்டவர்களை போலீஸாரிடம் அழைத்து வந்தவர், திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெனி. இவர் திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவராக உள்ளார். தற்போது உள்ளாட்சித் தேர்தலில் திருநெல்வேலி மாநகராட்சி 16-வது வார்டுக்கு அதிமுக வேட்பாளராக டி.ஜெனி அறிவிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x