

காவிரி பிரச்சினைக்காகவும், கர் நாடக தமிழர்கள் மீதான தாக்கு தலைக் கண்டித்தும் தமிழகத்தில் நடைபெற்றதுபோலவே புதுச்சேரியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
புதுச்சேரி முழுவதும் 20 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன. பேருந்துகள், ஆட்டோக்கள், லாரிகள், சரக்கு வாகனங்கள் ஓடவில்லை. தமிழ் நாடு அரசுப் பேருந்துகள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் புதுச் சேரிக்குள் இயக்கப்பட்டன. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. ஆனால் அரசுப் பள்ளிகள் இயங்கின. அரசு அலுவலகங்களும் வழக்கம்போல் இயங்கின. வாகனங்கள் இயங்காத தால் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு சென்ற பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். புதுச்சேரியில் உள்ள திரையரங்கு களில் காலை, மதியக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டி ருந்தன. கடற்கரைப் பகுதி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.
பல்வேறு தமிழ் அமைப்பினர், திமுக, பாஜக, பாமக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்றன. இதில் 725 பேர் கைது செய்யப்பட்டனர். சில கல்வீச்சு, டயர் எரிப்பு சம்பவங்கள் தவிர எந்த அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.
புதுச்சேரி காமராஜர் சாலையில் தனியார் மதுபானக் கடை ஒன்று இயங்கியது. அங்கு வந்த ஒரு கும்பல் அந்த மதுபானக் கடையின் மீது கற்களை வீசியது. மேலும் உள்ளே புகுந்து மது பாட்டில்களை உடைத்தும், கற்களை வீசியும் தாக்கினர்.
விழுப்புரம், கடலூர்
விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக் கப்பட்டிருந்தன. 5 இடங்களில் ரயில் மறியல், 5 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் 1,185 பேர் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் 6 இடங்களில் சாலை மறியல், 7 இடங்களில் ரயில் மறியல் நடைபெற்றது. டெல்டா பாசனப் பகுதிகளான காட்டுமன்னார்கோவில், முஷ் ணம், புவனகிரி பகுதிகளில் முழு மையாக கடைகள் அடைக்கப்பட் டிருந்தன. கடலூர் மாவட்டத்தில் 1,556 பேர் கைது செய்யப்பட்டனர்.