

சென்னை பெருங்குடியில் உள்ள ஹோண்டா ஷோ ரூமில் தீ பிடித்ததில் ரூ.3 கோடி மதிப்புள்ள சுமார் 500 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாகின.
பெருங்குடி பர்மா காலனி 2-வது பிரதான சாலையில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் ஷோ ரூம் மற்றும் குடோன் உள்ளது. இங்கிருந்த குடோனில் சுமார் 500 புதிய மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவில் இந்த மோட்டார் சைக்கிள்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதைப்பார்த்த காவலாளி, தீய ணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். துரைப்பாக்கம், திரு வான்மியூர், வேளச்சேரி, எழும்பூர், திருவான்மியூர் ஆகிய இடங்களில் இருந்து 7 வாகனங்களில் வந்த 30 தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
விபத்தினால் தீ பிடித்ததா அல்லது சதி வேலையின் காரண மாக தீ பிடித்ததா என்பது குறித்து துரைப்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.