

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள அருவங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி வெண்ணிலா (42).
இவர் ஆயிஷா என்ற பெயரில் சவுதி அரேபியாவுக்கு செல்ல விசா கேட்டு ஜூன் மாதம் விண்ணப்பித்துள்ளார். அவரது மனுவை மீது ஆய்வு செய்தபோது போலி பெயரில் பாஸ்போர்ட் பெற்றுள்ளதும் அதன்மூலம் 3 முறை சவுதி அரேபியாவுக்கு சென்று திரும்பியதும் தெரியவந்தது.
இதுகுறித்து தானிப்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். போலீஸ் தேடுவதை அறிந்த வெண்ணிலா தலைமறை வாகிவிட்டார். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு வீட்டுக்கு வந்தவர் மீண்டும் தப்பிச் செல்ல முயன்றபோது போந்தை ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வைத்து தானிப்பாடி போலீஸார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.