

காவல் நிலையத்தில் விசாரணை யின்போது சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞரின் சடலம் உறவினர் களிடம் ஒப்படைக்கப்பட்டு, நேற்று இரவு அடக்கம் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விசா ரணைக்கு அழைத்துச் செல்லப் பட்ட சையது முகம்மது, எஸ்ஐ காளிதாஸ் துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார்.
இதையடுத்து, எஸ்ஐ காளி தாஸை கைது செய்வதுடன், பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், சையது முகம்மது குடும்பத்துக்கு இழப்பீடு, அரசு வேலை வழங்கக் கோரியும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அதுவரை சையது முகம்மது உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஜடி விசார ணைக்கு முதல்வர் உத்தரவிட்ட துடன், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து சையது முகம்மது குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, நேற்று மாலை ராமநாதபுரம் சட்டப் பேரவை உறுப்பினர் ஜவாஹி ருல்லா முன்னிலையில், சையது முகம்மது உடல் அவரது குடும்பத் தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, எஸ்.பி. பட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்டது.