Published : 21 Feb 2014 10:00 AM
Last Updated : 21 Feb 2014 10:00 AM

புதிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னையில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டம் உட்பட 4 திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.

சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டிட வளாகம் (ஏ-பிளாக்), டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக (பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை) மாற்றும் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன.

பொதுப்பணித் துறையின் மூலம் சுமார் ரூ.26 கோடியில் மருத்துவமனையாக மாற்றப் பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் 500 படுக்கைகள், 20 நவீன அறுவை சிகிச்சை அரங்கங்கள், 200 கழிப்பறைகள், பரிசோதனைக் கூடங்கள், ரூ.97 கோடியில் வெளிநாடுகளில் இருந்து அதிநவீன மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.

மொத்தம் ரூ.143.14 கோடி செலவில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நிறுவப்பட்டுள்ளது.

இந்த பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயல கத்தில் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்க வுள்ளார். இதேபோல், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டித்து வைக்கிறார்.

தொலைநோக்கு திட்டம் 2023 – பகுதி 2 வெளியீடு:

சென்னை கிண்டியில் நடக்கவுள்ள விழாவில் தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2013 – பகுதி - 2, தமிழ்நாடு தொழில் கொள்கை 2014, தமிழ்நாடு ஆட்டோமொபைல் மற்றும் உதிரி பாகங்கள் கொள்கை 2014, தமிழ்நாடு உயிரி தொழில்நுட்பக் கொள்கை 2014 ஆகியற்வற்றை முதல்வர் வெளியிடுகிறார். மேலும், தமிழ்நாடு உட்கட்டமைப்பு வாரியத்தின் இணையதளத்தை தொடங்கி வைக்கிறார்.

பின்னர் ரூ.5,081 கோடி மதிப்பிலான 16 இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் முதல்வர் முன்னிலையில் நடக்க வுள்ளன.

66 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா:

முதல்வரின் 66-வது பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் 66 லட்சம் மரக்கன்றுகள் நடும் மாபெரும் திட்டத்தை முதல்வர் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் தொடங்கி வைக்கவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x